திருச்சி சரக காவலர் உடற்தகுதித் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள்

Admin
Read Time2 Minute, 50 Second

திருச்சி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் ஃ சிறைத்தறை காவலர் மற்றும் தீயணைப்போர் காவலர்களுக்கான (ஆண்/பெண்) பொதுத்தேர்வு-2019 க்கான எழுத்துத் தேர்வு 25.09.2019 அன்று நடைபெற்றது.

அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்திலுள்ள உள்ள மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை விண்ணப்பதாரர்களுக்கு வரும் 06.11.2019 முதல் 11.11.2019 வரை உடற்கூறு அளத்தல் (PMT) மற்றும் உடல்தகுதி தேர்விற்கு (ET) அழைப்பாணை கடிதம் (Call Letter) சம்மந்தப்பட்டவர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டது.

இதன்படி, திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 06.11.2019 முதல் 08.11.2019 வரை காலை 06.00 மணி முதல் ஆண்களுக்கு மட்டும் உடற்கூறு அளத்தல் மற்றும் உடல்தகுதி (ET) தேர்வு நடைபெறுகிறது. மேலும் 09.11.2019 மற்றும் 11.11.2019 ஆகிய இரண்டு நாட்கள் பெண்காவலர்களுக்கான உடல்தகுதி தேர்விற்கான (PMT/ET) தகுதி மற்றும் அளவீடுகள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்படி, காவலர் உடற்தகுதித் தேர்வில் கலந்து கொள்ள வருகை தரும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து வழித்தடங்கள் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. ஆகையால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பேருந்து வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழித்தடங்கள்:

துவாக்குடி மார்க்கம் – 128A, 128B, 128C, 128D, 128E, 128F,
பொன்மலை மார்க்கம் – 17B, 109A, 109B
பொன்மலைப்பட்டி மார்க்கம் – 016B, 14A, 016A, 016C, 015A, 014B
OFT, HAPP (via Airport) மார்க்கம்    – 063A, 016B, 016C, 063C, 059E, 059F,059C,028A
059A, 059B, 059D, 059H, 059G, 001G, 063D
கீரனூர் – K1

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாநகருக்கு புதிய காவல் துணை ஆணையர் K.பழனிகுமார்

161 மதுரை : மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் நேற்று  (06/11/2019) பொறுப்பேற்றுக்கொண்டார்.  காவல் துணை ஆணையராக (குற்றம்) […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami