திருச்சி ரயில்வே காவல்துறை புதிய எஸ்பியாக Dr. T. செந்தில்குமார் பதவியேற்பு

Admin

திருச்சி : திருச்சி ரயில்வே எஸ்பியாக பொறுப்பேற்ற உயர்திரு . Dr. T. செந்தில்குமார்  அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

2003 ஆம் ஆண்டு காவல் துணை கண்காணிப்பாளராக தேர்ச்சி பெற்ற திரு. செந்தில்குமார் அவர்கள் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் உள்ள பிளவர் பஜாரில் துணை ஆணையராகவும், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2013 ல் ஆந்திராவின் புட்டூரில் நடந்த போலீஸ் நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாத நபர்களான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரைக் கைது செய்வதில் அவர் வகித்த பங்கிற்கு விரைவான பதவி உயர்வு கிடைத்தது.

சட்டத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் திரு. செந்தில்குமார்,“Black Town – George Town, through the ages” என்ற  தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்பித்து முனைவர் பட்டத்தைப் பெற்றவர்.

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறோம்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்

93 சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami