காவலர் பணிக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு

Admin

தூத்துக்குடி: தள்ளிவைக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18.11.2019 முதல் 20.11.2019 வரை நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் &மூன்றாம் பாலினம்) இரண்டாம் நிலை சிறைக் காவலர், (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிக்காக எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்ட உடற்கூறு தேர்வு(PMT) தூத்துக்குடி மாவட்டம், ஜார்ஜ் ரோடு, தருவை மைதானத்தில் வைத்து 06.11.2019 முதல் 08.11.2019 வரை நடைபெற்றது.

மேற்படி தேதிகளில் உடற்கூறு தேர்வில்(PMT) வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு(PET) 09.11.2019, 11.11.2019 மற்றும் 12.11.2019 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. அதன்டிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதமும் வழங்கப்பட்ட நிலையில் மேற்படி தேர்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்பொழுது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உத்தரவின் அடிப்படையில் மேற்படி உடற்தகுதி தேர்வினை(PET) 18.11.2019 முதல் தொடர்ந்து நடத்தி முடிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டாம் கட்ட உடல் தகுதித் தேர்வுக்கு தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே குறிப்பிட்டுள்ள தேதிக்கு பதிலாக 09.11.2019 ஆம் தேதி நடைபெற இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கான உடல்தகுதி தேர்வு 18.11.2019 அன்றும், 11.11.2019 ஆம் தேதி நடைபெற இருந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கான உடல்தகுதி தேர்வு 19.11.2019 அன்றும், 12.11.2019 ஆம் தேதி நடைபெற இருந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களுக்கான உடல்தகுதி தேர்வு 20.11.2019 தேதி அன்றும் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்கனவே உடற்தகுதி தேர்வுக்காக(PET) வழங்கப்பட்ட அழைப்பாணை கடிதத்துடன் மேற்படி தேர்வுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 6.00 மணிக்குள் தூத்துக்குடி, ஜார்ஜ் ரோடு, தருவை மைதானத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தை தொழிலாளர் கூடாது, நிறுவனங்களுக்கு திருவள்ளூர் எஸ்.பி அறிவுறுத்தல்

60 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019)  நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.  அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami