கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த திருச்சி காவல் துறையினர்

Admin

திருச்சி : திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் சரகம், சிறுகனூர் – தச்சன்குறிச்சி செல்லும் சாலையிலிருந்து ரெட்டிமாங்குடி செல்லும் பிரிவு சாலையிலிருந்து இடதுபுறம் 200 மீட்டர் தொலைவில் 13.11.19-ந் தேதி காலை 08.30 மணியளவில், வனபகுதியில் ஸ்கோடா காரின் உள்ளே முன்புறம் ஓட்டுநர் இருக்கையில் அடையாளம் தெரியாத 90% எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக தச்சன்குறிச்சி வனபகுதியில் ரோந்து அலுவலில் இருந்த வன பாதுகாவலர் தகவல் கொடுத்தார்.

தகவலின்படி சம்பவ இடம் சென்று, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் லால்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில், சம்பந்தபட்ட வாகனத்தின் Engine மற்றும் chassis எண்களின் அடிப்படையில் வாகனத்தின் பதிவு எண் TN 03 F 1099 – Skoda   மற்றும் உரிமையாளர் ஜாகீர் உசைன் என்பதும், கொலை செய்யப்பட்ட நபர் இவர் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், இறந்துபோனவரின் மகன் அக்ரம்உசைன் என்பவரிடம் புகாரை பெற்று, சிறுகனுர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்ததில், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக 12.11.19-ந் தேதி மேற்படி சரவணன் என்பவருக்கு சொந்தமான கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள வஜிரா லாட்ஜிக்கு வரவழைத்துள்ளனர். பின்பு லாட்ஜியிலேயே அடித்து அவரது காரிலேயே எடுத்து வந்து சம்பவ இடத்தில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான மேற்படி சரவணன், மணிகண்டன் , சக்திவேல், மோகன் ஆகியோர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி சரகத்திற்குட்பட்ட காவலர் பதவிக்கான தேர்வு விதிமுறைகள் அறிவிப்பு

74 திருச்சி : இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு குறித்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆண்/பெண் காவலர் பதவிக்கான உடல் தகுதி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami