தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Admin

தூத்துக்குடி : காயல்பட்டினம், தீவு தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கான வாடகை பணத்தை காயல்பட்டினம், தீவு தெருவைச் சேர்ந்த முகமது பரூக்(67/13) என்பவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பெற்றுவந்தார்.

இந்நிலையில் வாடகை பணம் மற்றொருவருக்கு மாற்றி வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முகமது பரூக் 09.06.2013 அன்று தனது நண்பர்களான பேயன்விளையை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(35), கீழ லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மலைமேகம்(53) ஸ்ரீதரன்(44) மற்றும் காயல்பட்டினம், தங்க பண்டகசாலை தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ்(35) ஆகியோருடன் சென்று அந்தப் பள்ளிக்கு சென்று பள்ளியில் உள்ள முக்கிய ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. ஏசுவடியான் பொன்னம்மாள்(59) அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகமது பரூக் இறந்துவிட்டார்.

இந்நிலையில் 25.11.2019 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. கௌதமன் குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியன், மலைமேகம், ஸ்ரீதரன் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 13,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் துரிதமாக விசாரணை செய்த காவல் ஆய்வாளர் திரு.முத்து சுப்பிரமணியன் (தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் உள்ளார்) மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு.மார்டின் பாஸ்கர் ஆகியோரை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

 

நமது குடியுரிடைம நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாணவர் காவல் படை மாணவர்கள்

65 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் இன்று  மாவட்ட […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami