Read Time1 Minute, 11 Second
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தை பார்வையிட்டனர்.
மேலும் இவர்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட காவல் அமைப்பு செயல்படும் விதம் குறித்தும், கட்டுப்பாட்டு அறையின் பணிகள் குறித்தும், காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த இரு மாதங்களாக மாவட்ட காவல் அலுவலகத்தை பார்வையிட்டு காவல் நிகழ்வுகளை அறிந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிடைம நிருபர்
S. சண்முக சுந்தரம்