சாலையில் கிடந்த நான்கரை லட்சம் பணத்தை ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin
Read Time1 Minute, 56 Second

மதுரை : திரு.சக்கரவர்த்தி என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூபாய்.4,47,500/- தவறவிட்டார்.

அவற்றை கண்டுபிடித்து தரும்படியும் கடந்த 30.11.2019 தேதி மதுரை மாநகர் டீ3-தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் திருமதி.கீதா தேவி அவர்கள் CCTV கேமிரா பதிவுகளை சேகரித்து புலன் விசாரணை நடத்திவந்தார்.

இந்நிலையில் (03.12.19) பழைய குயவர் பாளையத்தை சேர்ந்த திரு.பூபாலன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS அவர்களிடம் சாலையில் கிடந்த கட்டை பையை ஒப்படைத்தார்.

பின்பு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, அவர்கள் முன்னிலையில் அதன் உரிமையாளர் திரு.சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். மேற்படி பணம், விலை உயர்ந்த சேலைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை நேர்மையான முறையில் உரியவரிடம் ஒப்படைத்த திரு.பூபாலன் என்பவரை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கில்லாடி வாகன கொள்ளையர்களை கைது செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

53 திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS , அவர்களின் உத்தரவின் பேரில் திருவேறும்பூர் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. பிரவீன் உமேஷ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami