இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம் 4 வது இடத்தை பிடித்துள்ளது

Admin

சென்னை:  2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலைசிறந்த 10 காவலர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலை சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி மகளிர் காவல் நிலையம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த 10 காவல் நிலையங்கள் பின்வருமாறு,
1வது இடம் – அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல் நிலையம்
2வது இடம் – குஜராத்தின் பலசினார் காவல் நிலையம்
3வது இடம் – மத்தியபிரதேசம் புர்கன்புர் ஏஜேகே காவல் நிலையம்
4வது இடம் – தமிழகத்தின் தேனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம்
5வது இடம் – அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள அனினி காவல் நிலையம்
6வது இடம் – டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலையம்
7வது இடம் – ராஜஸ்தானில் உள்ள காவல் ஜலாவரில் உள்ள பகானி காவல் நிலையம்
8வது இடம் – தெலுங்கானா மாநிலம் சோப்பதாந்தி காவல் நிலையம்
9வது இடம் – கோவாவின் பிச்சோலியம் காவல் நிலையம்
10 வது இடம் – மத்திய பிரதேசத்தில் உள்ள பர்கவா காவல் நிலையம் பிடித்துள்ளது.

2018ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களில் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த 10 இடங்கள் பட்டியலில் தேனி மகளிர் காவல் நிலையம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற நபர் கைது

200 திண்டுக்கல் : திண்டுக்கல் நகர மகளிர் காவல் நிலையம் சார்பாக திண்டுக்கல் நகர் பாரதிபுரம் பகுதியில் வசித்து வந்த உதயகுமார் 21 என்பவர் அதே பகுதியை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami