மக்கள் நல நிர்வாகிகள் சார்பில் மதுரையில் 16 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

Admin

மதுரை : மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், தல்லாகுளத்தில் உள்ள அண்ணாநகர் சொக்கிகுளத்தில் உள்ள குடியிருப்போர் மக்கள் நல நிர்வாகிகள் இணைந்து 16 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு கார்த்திக் IPS அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் திரு.காட்வின் ஜெகதீஷ் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. சந்திரன், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி, வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி மற்றும் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ராஜேஷ் ஆகியோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் மக்கள் நல நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 16 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் நடக்கவிருக்கும் SI எழுத்து தேர்வுக்கு அறைகள், பாதுகாப்பு குறித்து SP ஆலோசனை

55 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் TNUSRB-ஆல் நடத்தப்படும் Sub Inspector of Police -க்கான எழுத்து தேர்வு முதல்கட்டமாக Department Quota-க்கும் (11.01.2020) மற்றும் இரண்டாம் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami