Read Time1 Minute, 4 Second
திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை நிறைவாழ்வு பயிற்சி திட்டம் மூலம் காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி இன்று 53வது வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமதி. சாந்தி மருத்துவ அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிறைவாழ்வு பயிற்சியை காவல் ஆய்வாளர் மற்றும் நிறைவாழ்வு பயிற்சி அலுவலர் திருமதி.அஜீம் தலைமையிலான பயிற்றுநர்கள் உதவி ஆய்வாளர் ராஜீவ் காந்தி மற்றும் மனநல ஆலோசகர் பிரபு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி