“பெண்கள் கொலை செய்தாலும் தப்பில்லை” ADGP ரவி

Admin

சென்னை : காவல்துறையினர் எப்படி தங்களை தற்காத்துக்கொள்ள என்கவுண்டர் என்ற உரிமை இருக்கின்றதோ, அதே போல் பெண்கள் தங்களுடைய உயிரை மற்றும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை செய்தாலும் தவறில்லை என்று தமிழக காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு.ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒரு கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரை தற்காப்புக்காக கொலை செய்ததாகவும், இந்த வழக்கில் அந்த பெண் உடனடியாக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்றும் அதனால் பெண்கள் தங்கள் மானத்தையும், உயிரையும், காப்பாற்றி கொள்ள கொலை செய்தாலும், தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதே போன்ற ஒரு பட்டியலை சென்னை மாவட்ட கண்காணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு

137 மதுரை : மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நேற்று (20.12.2019)  ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami