Read Time1 Minute, 6 Second
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அன்று பொட்டல் குழி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள்(52) என்பவருடைய தாயார் செல்வ நேசம்மாள்(73) வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மேலசூரங்குடியை சேர்ந்த செல்வராஜ்(54) என்பவர் செல்வ நேசம்மாளிடம் பணம் மற்றும் நகையை கேட்டுள்ளார். நேசம்மாள் தர மறுக்கவே நேசம்மாளின் கழுத்தில் கிடந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பினார். பின்பு இது பற்றி ஜெய பெருமாள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் திரு. முத்துராஜ் குற்றவாளி செல்வராஜை கைது செய்து u/s 394 IPC படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்