வேலூர் DIG காமினி, வேலூர் SP பிரவேஷ்குமார், இராணிப்பேட்டை SP மயில்வாகனன் அவர்களுடன் மற்றும் அரக்கோணம் காவல்நிலையத்தில் காவலர் தின விழா அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

Admin
Read Time4 Second

இராணிப்பேட்டை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.

வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. காமினி,IPS,  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார், IPS மற்றும் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன், ஆகியோருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படிஇ போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா ஓளிபரப்பு ஊடக பிரிவு தமிழ்நாடு மாநில தலைவருமான திரு.S.பாபு, ஓளிபரப்பு ஊடக பிரிவு, வேலூர் மாவட்ட பொது செயலாளர் திரு.T.கஜேந்திரன் காவலர் தினத்திற்கு பொன்னாடை மற்றும் கேக் உள்ளிட்ட இனிப்புகள்   நேரில் சென்று வழங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

வேலூர் சரக டிஐஜி திருமதி. காமினி ஐபிஎஸ் அவர்கள் காவலர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். சக காவலர்களுக்கும் காவலர் தினம் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் ஐபிஎஸ் அவர்களுக்கு காவலர் தின வாழ்த்து தெரிவித்து, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பின் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவலர்களுக்கு இனிப்பு வழங்கி காவலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்களுக்கும், காவலர் தின வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. நேற்றைய நேற்றைய தினத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனம் அவர்களுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் காவலர் தினத்தை கொண்டாடும் வகையில், அரக்கோணம் சுற்றியுள்ள காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய, காவலர்களுக்கு நற்சான்றிதழ் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்பு அங்குள்ள காவலர்கள் அனைவருக்கும் காவலர் தினத்தை முன்னிட்டு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், காவலர்களை காவலர் தினம் மூலம் கௌரவ படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

மாவட்டம் முழுவதும் காவலர் தின சுவரொட்டிகள் மூலம் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தினம் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு காவலர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் வகையில் வருட நாட்காட்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் காவலர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன், இனிப்புகள் வழங்கியும், மரக்கன்று நட்டும், காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும், காவல்துறையினருக்கு பயனுள்ள வருட நாட்காட்டி வழங்கியும், வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டியும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

 

 

காவலர்கள் தினம் குறித்து மேலும் அறிந்து கொள்ள www.nationalpoliceday.in

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமேஸ்வரத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

161 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email இராமநாதபுரம் : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை […]

மேலும் செய்திகள்

Bitnami