தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் SP செ.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தல்

Admin

நாகப்பட்டினம்  : நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆலோசனை வழங்கினார். நாகப்பட்டினம் கொள்ளிடம், சீர்காழி, செம்மானார்கோவில்,திருமருகல், கீழ்வேளூர், ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு 490 வாக்குச்சாவடி மையங்களில் (Polling Station Locations) 1106 வாக்குச்சாவடிகளில் (Polling Stations) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு சிறப்புக்காவல் படை போலீசார் , ஆயுதப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் , ஊர்காவல்படையினர்,முன்னாள் இராணுவத்தினர், மற்றும் தன்னார்வலர்கள் என முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற சுமார் 2000 போலீசார் இந்த முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் மேலும் ஓவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் வீதம் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 துணை காவல கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மேற்பார்வையில் ஒரு ஆய்வாளர்கள் ஒரு உதவி ஆய்வாளர் அல்லது ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அடங்கிய மொபைல் வாகன ரோந்து படையினர் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு மற்றும் அதன் உபகரணங்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்வது முதல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவற்றை வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்படைப்பது வரை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 79 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் அசம்பாவிதம் நிகழா வண்ணம் பொதுமக்கள் அமைதியாக வாக்களிக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் ஏதேனும் புகார் வந்தால் நேர்மையாகவும் நடுநிலையாகவும் பாரபட்சம் இன்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தங்கள் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களில்
100,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பேருந்தை தவறவிட்ட தந்தை¸ தவித்து கொண்டு இருந்த பெண்குழந்தைகளுடன் சேர்த்த தலைமை காவலர்

53 செங்கல்பட்டு:  விழுப்புரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் 23-12-2019-ம் தேதியன்று தந்தை ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami