கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Admin
0 0
Read Time2 Minute, 11 Second

தூத்துக்குடி :  தூத்துக்குடி, சிவந்தாகுளம் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்ற சூசை இருதய செல்வம் (60) மற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, MGR நகரைச் சேர்ந்தவர் ரகு(34). இவர்கள் இருவர் மீதும் பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் 01.12.2019 அன்று தூத்துக்குடி தென்பாகம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மேற்படி எதிரிகள் சூசை இருதய செல்வம் மற்றும் ரகு ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரிகள் சூசை இருதய செல்வம் மற்றும் ரகு ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்

அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் மேற்படி எதிரி சூசை இருதய செல்வம் மற்றும் ரகு ஆகிய இருவரையும் 27.12.2019 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புத்தாண்டு அன்று விபத்தை தவிர்க்க 60 இடங்களில் வாகன தணிக்கை, இராணிப்பேட்டை SP தகவல்

79 ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் சார்பில் வருகின்ற, புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami