புதிய நூதன முறையை கையாளும் கொள்ளையர்கள், நாகப்பட்டினம் காவல்துறை எச்சரிக்கை

Admin

நாகப்பட்டினம் :  ஆபாச படத்தை பதிவிறக்கமோ அல்லது பதிவேற்றமோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்ற நபர்களிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து விழிப்புடன் இருக்க நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் அதிகம் ஆபாச படம் பார்க்கும் நாடாக இந்தியா இருப்பது மென்மேலும் வேதனைகளுக்கு ஆளாக்கியுள்ளது. அதிலும், குறிப்பாக, சென்னை முதலிடம் வகித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து, பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்து.

இந்த நிலையில், ஆபாச படத்தை பதிவிறக்கமோ அல்லது பதிவேற்றமோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும், ஆபாச படம் பார்ப்பது போன்ற செயல்களை மேற்கொள்பவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் நூதனமுறையில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் குறிப்பாக காவல்துறை அழைப்பது போல் தொடர்பு கொண்டு நீங்கள் ஆபாச படம் பார்த்ததாக பொய்யான தகவலை கூறி உங்களை இதிலிருந்து காப்பாற்றுவதற்கு ரூபாய் 10000/- எனது வங்கிக்கணகில் செலுத்துமாறு உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாறவேண்டாம் எனவும் மேலும் மேற்கண்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் இது போன்ற நூதன கொல்லையில் ஈடுபடுவோர் குறித்து தங்கள் புகார்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களில்,
100,
9498100905,
8939602100,
7997700100,
04365242999,
04365248119,
24 க்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுகொண்டர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

26 தூத்துக்குடி :  தூத்துக்குடி, சிவந்தாகுளம் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்ற சூசை இருதய செல்வம் (60) மற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, MGR நகரைச் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami