வேட்டையாடிய 9 காட்டு முயல்களை உயிருடன் மீட்ட இராமநாதபுரம் வனதுறையினர்

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் வனசரக அலுவலர் திரு.சு. சதீஷ் தலைமையில் , வனவர் திரு. மதிவாணன், வனகாப்பாளர் திரு. குணசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் 5/1/2020 அன்று அதிகாலை அச்சுந்தன் வயல் ECR சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்ய முற்பட்டபோது, தப்பித்து வந்த நபரை பின் தொடர்ந்து, இராமநாதபுரம் மீன் மார்கெட் அருகில் பிடித்து சோதனை செய்த போது சாக்கு பையில் உயிருடன் 9 காட்டு  முயல்களும், வேட்டையாட பயன்படுத்தும் பேட்டரியும் கைப்பற்றப்பட்டு இராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வன உயிரின காப்பாளர் திரு. து. கோ. அசோக் குமார் இ. வ. ப. அவர்களால் அபராத தொகை விதிக்கப்படும். காட்டு முயல்கள் உயிருடன் இருந்ததால் பாதுகாப்பான காட்டுப்பகுதியில் வனத்துறையினரால் விடப்படும்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

5 வயது குழந்தையை கார் ஓட்ட வைத்தவரை தட்டி கேட்ட காவலரை திட்டிய ஒட்டுநர் பயிற்சி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

128 இராமநாதபுரம் : போக்குவரத்து நெரிசல் மிகுந்த கேணிக்கரை சந்திப்பு முதல் அரண்மனை செல்லும் வழியில் நேற்று முன்தினம் மாலை 4:40 மணியளவில் 5 வயது குழந்தையை  […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami