வேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார்

Admin
Read Time2 Second

வேலூர் : காவலன் செயலைப் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை 10 மணி அளவில், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறைத் துணை தலைவர் வேலூர் சரகம் திருமதி.காமினி, IPS அவர்கள் காவலன் SOS  என்ற செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவலர்கள் அடங்கிய தனி குழுவினர் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS ம் அவர்களும் உடனிருந்தார்.

இன்று காவலன் செயலி பீட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த உலகத்தில் 99% பெயர்கள் கைபேசி பயன்படுத்தி வருகிறார்கள். இதில் நம் உயிரை காக்கும் செயலிகள் எதுவும் கிடையாது. எனவே பெண்களின் பாதுகாப்பிற்காக நமது தமிழக முதல்வர் அவர்களால் காவலன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது பெண்களுக்கு எனவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் நமது ஆண்ட்ராய்ட் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் பயன்பாட்டை உணர்த்துவதற்காக இரண்டு பெண் ஆய்வாளர்கள், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு நடமாடும் ஊர்தியில் சென்று காவலன் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துவது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், கேலி கிண்டல்கள், வன் கொடுமைகள் பற்றியும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன் கொடுமைகள் பற்றியும், வேலை செல்லும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 51 கல்லூரிகள், 1270 பள்ளிகள், 536 கிராமங்களுக்கும் வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக தனியாக என்ற 94891 77100 தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு புதிய அலுவலகம், முதலமைச்சர் திறந்துவைத்தார்

38 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக […]

மேலும் செய்திகள்

Bitnami