டிக்டாக் செய்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை அளித்த தூத்துக்குடி காவல்துறையினர்

Admin
0 0
Read Time2 Minute, 3 Second

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பணிமனையில் நின்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தின்முன்பாக நின்றவாறு மூன்று இளைஞர்கள் டிக் டாக் வீடியோ பதிவிட்டனர். இது குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இவர்கள் முனியசாமிபுரம் மற்றும் லெவஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

3 பேரையும் பிடித்து தென்பாகம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் மற்றும் எஸ்.பி. ராஜாமணி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள், காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்க்காக, இந்த மூன்று பேரையும் பெரிய மார்க்கெட் சிக்னலில் எட்டுமணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணிசெய்ய வைத்து, காவல்துறையை பெருமை படுத்தினார். இவர்களுக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் சிவகுமார் பயிற்சி அளித்தனர்.

காவல்துறையினரின் இத்தகைய நூதன தண்டனை, அவர்களுக்கு அவர்களுடைய தவறை உணர செய்து, திருந்தி வாழ வழி வகை செய்துள்ளது என்று பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எவ்வித பாதிப்பும் ஏற்படாது வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரபகுதியில், அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடை‌ப்பு போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami