132
Read Time1 Minute, 17 Second
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி போலி அடையாள அட்டையைக் காட்டி விஐபி தரிசன டிக்கெட் பெற்ற நபரை தெலுங்கானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். .தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்ற அந்த நபர் கூடுதல் செயல் அலுவலர் அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றுள்ளார்.
அருண்குமாரின் அடையாள அட்டையில் சந்தேகமுற்ற தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னாள் அமைச்சர் முகேஷ்கவுடு உள்ளிட்ட பலரிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பதும், தரிசனத்துக்காக அடையாள அட்டையில் ஐபிஎஸ் என அச்சிட்டு டிக்கெட் பெற முயன்றதும் தெரியவந்தது.
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை