காவல் உதவி ஆய்வாளர் தேர்வுவை மேற்பார்வையிட்ட IG திரு.செந்தாமரைக்கண்ணன்

Admin

தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் 32 மையங்களில் நடைபெறும் தேர்வை 1 லட்சத்து 40 ஆயிரத்து 243 பேர் எழுதுகின்றனர். 9069 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு சிறப்பு அதிகாரியான சென்னை தலைமையிடத்து காவல்துறை தலைவர் திரு.செந்தாமரைக்கண்ணன், தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் மேற்பார்வையில், இன்று தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 3252 ஆண் விண்ணப்பதாரர்களும் மற்றும் 695 பெண் விண்ணப்பதாரர்களும், மொத்தம் 3947 பொது விண்ணப்பதாரர்கள் இன்று (12.01.2020) தூத்துக்குடியில் நான்கு தேர்வு மையங்களில் பங்கேற்றுவுள்ளனர்

(1) தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1500 ஆண் விண்ணப்பதாரர்களும்,

(2) செயின்ட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1,000 ஆண் விண்ணப்பதாரர்களும்,

(3) விகாசா மேல்நிலைப்பள்ளியில் 500 ஆண் விண்ணப்பதாரர்களும்,

(4) புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 695 பெண் மற்றும் 252 ஆண் ஔ விண்ணப்பதாரர்களும் மொத்தம் 947 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்

60 திருவாரூர் :  திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியிலிருந்த முகில் என்ற துப்பறியும் மோப்பநாய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது. 07.01.2019ம் தேதியன்று முகிலுக்கு காவல்துறை மரியாதையுடன் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami