சுட்டு கொல்லப்பட்ட வில்சன் குறித்து தகவல் தருவோருக்கு 7 லட்சம் சன்மானம் அறிவிப்பு

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு உட்பட்ட சோதனைச் சாவடியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, காரில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார்.

குற்றவாளிகள் தப்பி ஓடியது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவானது.இந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநில டிஜிபிக்கள் திருவனந்தபுரத்தில் ஆலோசனை நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரள டிஜிபி லோக்நாத் பெகாரா, குற்றவாளிகள் குறித்து துப்புக்கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதே போல குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது

45 பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். இஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் கைது செய்தனர். பல இடங்களில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami