மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

Admin

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் துரைராஜ் (26) என்பவர் 17.12.2019 ம் தேதி மதியம் 0300 மணிக்கு கண்ணணூர் அய்யாருவில் 1 யூனிட் மணல் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக டிராக்டருடன் கூடிய டிப்பரில் ஏற்றி கண்ணணூர் பாளையம் பிரிவு ரோடு அருகே வந்தபோது, கிடைத்த தகவலின் பேரில் நிர்வாக அலுவலர் சஞ்சீவி மற்றும் வருவாய் ஆய்வாளர் உடன் அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது டிராக்டர் வாகனத்தை ஓட்டிய துரைராஜ் வேகமாக வருவாய் துறை அதிகாரிகளை கொலை செய்யும் நோக்கத்துடன், ஓட்டிய போது அதிகாரிகள் விலகி தப்பித்து சத்தம் போட வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.

பின் கண்ணணூர் கிராம நிர்வாக அதிகாரி சஞ்சீவி கொடுத்த புகாரில் 17.12.2019 ம் தேதி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரியை தேடிய போது, 18.12.2019 ம் தேதி கண்ணணூர் பஸ்ஸடாப்பில் நின்ற வழக்கின் துரைராஜ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் குற்றவாளி தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவராக இருப்பதால் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரிலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படியும், மேற்கண்ட எதிரி துரைராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீடு புகுந்து 120 பவுன் திருடிய மூவர் கைது 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

38  மதுரை :  கடந்த 27.12.2019 –ம் தேதியன்று மதுரை அப்பாதுரை நகர் முதல் தெரு, கூடல்புதுரைச் சேர்ந்த சோலை என்பவரது மகன் குணசேகரன் என்பவர் சில […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami