திருச்சியில் டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் தேவை

Admin

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை சார்பாக டிராபிக் வார்டன் பதவிக்கு தன்னார்வலர்கள் இடமிருந்து திருவெரும்பூர், லால்குடி, கொள்ளிடம், சமயபுரம், முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலான இடங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் வயது வரம்பு 25 முதல் 45 வரை கல்வித்தகுதி ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர் ஆகவும், நல்ல உடற் தகுதி உடைய வராகவும், அரசியல் கட்சியில் எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை  காவல் துணை கண்காணிப்பாளர்  அவர்களின் அலுவலகத்தில் 31/01/ 2020 ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜீயபுரம் DSP கலந்துகொண்ட சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா

61 திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், பெருகமணி ஊராட்சி எட்டாவது வார்டு மாரியம்மன் கோயில் தெருவில், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami