காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பெண்களுக்கு இலவச தலைக் கவசம்

Admin

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் 07.01.2020-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் அவர்கள் பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் விழாவை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும், தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஏற்படும் பின் விளைவுகளையும் எடுத்துக் கூறி பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அஜய் தங்கம் மற்றும் ஆரோவில் காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி உட்பட ஏராளமான பொதுமக்கள் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

4.250 கி.கி. கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

76 மதுரை : மதுரை மாநகர இன்று 17.01.2020-ம் தேதி C3- எஸ்.எஸ். காலனி ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திலீபன் அவர்கள் மதுரை டவுன், […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami