97
Read Time1 Minute, 6 Second
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 20.01.2020, குமரி மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் 08.01.2020 அன்று இரண்டு தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தானாக முன் வந்து 7 லட்சம் ரூபாயை வழங்கினர்.
அந்த ரூபாயை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் குடும்பத்தினரிடம் வழங்கினார். அவர்களுடன் மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயபாஸ்கர், மற்றும் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.