தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழா

Admin

தஞ்சை : தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர்  தாழுக்கா  திருவிடைமருதூர் காவல்துறை நடத்திய   31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி இன்று (24-1-2020 )   தலைகவச  விழிப்புணர்வு    வாகன பேரணி  நடைப்பெற்றது.

இப்பேரணியை கனம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதியரசர் உயர்திரு . நிலவரசன் அவர்கள் முன்னிலை வகித்து பச்சை கொடியசைத்து துவக்கி வைக்க  திருவிடைமருதூர் காவல்துறை  துணை கண்காணிப்பாளர்  திரு.V.அசோகன் அவர்கள் தலைமையில்   பேரணி தொடங்கியது .

இவ்விழாவில் திருவிடைமருதூர்  காவல்நிலைய ஆய்வாளர்    திருமதி . விஜயா , பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி .சுகுணா ,திருப்பணந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி .கவிதா ,  உதவி ஆய்வாளர்கள் திரு .காசிஅய்யா,இளம்பரிதி மற்றும் தலைமை காவலர்கள் சிங்காரவேலு, சுதாகர் மற்றும் காவல் துறையினர் சுமார் ஐம்பது பேர்களும்  மற்றும் பொதுமக்கள் பலரும் திருவிடைமருதூர் காவல் நிலையத்திலிருந்து   இருசக்கர  வாகனத்தில் தலைகவசம் அணிந்து  திருவிடைமருதூர்  தாழுக்காவின்   முக்கிய ஊர்களின்  வழியாக ஆடுதுறை பேருந்து நிலையம் வரை சென்று  பொதுமக்களுக்கு தலைகவச விழிப்புணர்வை  ஏற்படுத்தினார்கள்.

நமது  சிறப்பு  செய்தியாளர்


குடந்தை
ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோமரன் பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

65 திருச்சி : திருச்சி மாவட்டம், ஜீயபுரம் கோட்டம், சோமரன் பேட்டை காவல் நிலைய நடத்திய சாலை பாதுகாப்பு வார விழாவை அரசினர் மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை மாணவ […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami