கும்பகோணம் மேற்கு காவல்நிலைய தலைமை காவலர் திரு A..பார்த்திபன் அவர்களுக்கு காந்தியடிகள் விருது 

Admin

தஞ்சை : சென்னை மெரினாவில் நடைபெற்ற 71-வது குடியரசுத் தினவிழாவில் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக வழங்கப்படும் சிறப்பு விருதான காந்தியடிகள் விருது மற்றும் ரூபாய் நாற்பதாயிரத்திற்கான காசோலையையும் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது திருக்கரங்களால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல்நிலைய தலைமைகாவலராக பணியாற்றிவரும் திரு A.பார்த்திபன் அவர்களுக்கு வழங்கினார் .

அதனை தொடர்ந்து நமது சிறப்பு செய்தியாளர் குடந்தை-ப-சரவணனிடம் பேசும் போது திரு .A.பார்த்திபன் கூறியதாவது .முதலில் இந்த சிறப்பு மிக்க காந்தியடிகள் விருதினை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் மற்றும் நான் பணியாற்றி வரும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் எனது முதற்கண் வணக்கத்தையும் , நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

என்னை ஈன்ற தாய் தந்தையருக்கும் என்னுடன் பணிபுரியும் காவல்துறை சார்ந்த நண்பர்களுக்கும் ,
இந்த விருது காணிக்கையாக்கி மகிழ்கிறேன் . இவ்விருது எனக்கு ஒரு விதமான புதிய உற்சகத்தை தந்துள்ளது என்றும் , இவ்விருதுடன் எனக்கு அளிக்கப்பட்டுள்ள ரூபாய் நாற்பதாயிரத்தில் இருபதாயிரம் ரூபாய் நான் பிறந்த ஊரின் வளர்ச்சி பயன் பாட்டிற்கும் மீதமுள்ள பணம் சமுதாய தொண்டிற்கும் தர உள்ளேன் என்றும் உற்சக சிரிப்புடன் சொல்லிச் சென்றார் .

காந்தியடிகள்  விருது பெற்ற திரு A.பார்த்திபன் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க போலீஸ் நீயூஸ் பிளஸ் சார்பில் நல் வாழ்த்துக்கள்.

 

நமது  சிறப்பு  செய்தியாளர்


குடந்தை
ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை வழங்கிய முதலமைச்சர்

109 கோயம்புத்தூர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற, குடியரசு தின விழாவில் சிறந்த […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami