திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் உறுதிமொழி

Admin

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் பொருட்டு N. பஞ்சம்பட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கடந்த 26.01.2020 ஆம் தேதி N.பஞ்சம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் V. பிரான்சிஸ் சேவியர் என்பவர் ஹெல்மெட் அணியாமல் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தவறான பக்கத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது A.வெள்ளோடு பிரிவு அருகே கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதற்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வினோத் அவர்கள் தலைமையில் 28.01.2020 தேதி N.பஞ்சம்பட்டி கிராம மக்கள் மற்றும் சின்னாளபட்டி காவல்துறையினர் சார்பாக சுமார் 150 நபர்கள் ஒன்றுகூடி N. பஞ்சம்பட்டியில் இறந்தவரின் புகைப்படத்துடன் பிளக்ஸ் போர்டு வைத்து அதன் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்தனர். மேற்படி விபத்து குறித்து அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பண உதவி விரைவாக வழங்கப்படுவதாக உறுதி அளித்ததன் மூலம் அவர்களை ஆறுதல் படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து கிராம மக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதுபோன்ற முயற்சியானது கிராம மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் இதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.

 

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுடர்மிகு சூரியனாக வலம் வரும் குடந்தை .உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன். MA

65 மூன்றாவது தலைமுறையாக காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் குடும்ப உறுப்பினரான திரு சி.கீர்த்திவாசன் MA அவர்கள் ஸ்ரீமுட்டம் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த காவல்துறையில் தலைமை காவலாராக பணியாற்றிய […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami