சுடர்மிகு சூரியனாக வலம் வரும் குடந்தை .உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன். MA

Admin 1
4 0
Read Time16 Minute, 23 Second

மூன்றாவது தலைமுறையாக காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் குடும்ப உறுப்பினரான திரு சி.கீர்த்திவாசன் MA அவர்கள் ஸ்ரீமுட்டம் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த காவல்துறையில் தலைமை காவலாராக பணியாற்றிய அமரர். சுப்பராயன் அவர்களின் மகனான திரு.சு.சிவசண்முகம் (டி -பழூர் காவல்துறையில் ssi-யாக பணியில் இருந்த போது இறந்தவர் ) மனைவி சி.அமுதா ஆகியோர்களின் இளைய மகனான திரு .சி.கீர்த்திவாசன் அவர்கள்.

தனது கல்வி பயணத்தை அறியலூர் மாவட்டம் செந்துறையில் தொடங்கி உயர்கல்வி ஜெயங்கொண்டத்திலும், BA . பட்டப்படிப்பை கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியிலும் MA. முதுகலை பட்டப்படிப்பை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்துள்ளார் .

உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை (2010 ) எழுதி அதில் தேர்ச்சி பெற்று சென்னை வண்டலூரில் உள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்றார் .

பின்னர்  2011 -தர்மபுரி டவுனில் பயிற்சி SI – யாக தனது காவல்துறை பணியை தொடங்கினார் . தொடர்ந்து சேலம் மாநகரத்தில் உதவி ஆய்வாளராக -2012 முதல் 2016 பிப்ரவரி வரையிலும் சிறப்பாக பணியாற்றிய பின், 2016- மார்ச் மாதம் பணிஇட மாற்றம் பெற்று கும்பகோணம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பொறுப்பு ஏற்றார் .

இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம்  மர்ம முடிச்சாக இருந்த பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை வேட்டையாடிய வேங்கை இவராவர்.

தனது உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி ,ஆலோசனைபடி பல முக்கிய வழக்குகளில் சம்மந்தப் பட்ட குற்றவாளிகளை சமயோசித மதி நூட்பம் கொண்டு அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார் என்பதும் , கடந்த -2018ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற குடியரசு  தினவிழாவில்,  மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர்  திரு செந்தில்குமார்  அவர்கள்  பரிந்துரையின் பேரில்  தஞ்சை  மாவட்ட    காவல்துறையில் சிறப்பாக  பணிபுரிந்த  காவலர்களுக்கு  தஞ்சை  மாவட்ட ஆட்சியர் விருதுகள் வழங்கினார்.

இவ்விழாவில் கும்பகோணம் மேற்கு  காவல் நிலைய உதவி ஆய்வாளர்   திரு கீர்த்திவாசன்  அவர்களுக்கும்  சிறப்பு விருது  மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும் .இவர் குடந்தையில் சந்தித்த வழக்குகளில் சில தங்கள் பார்வைக்கு,

பல  லட்சம்  மதிப்புள்ள வெளி மாநில மதுவகை பாட்டில்கள் வழக்கு (15-10-2017 )

தஞ்சை மாவட்ட  காவல்துறை  கண்காணிப்பாளர்  Dr .திரு செந்தில்குமார்   அவர்களின்   உத்திரவின் படி  துணை கண்காணிப்பாளர்    திரு.கணேசமூர்த்தி   மேற்பார்வையில்   அமைக்கப்பட்ட சிறப்பு   தனிப்படை உதவி ஆய்வாளர்  கீர்த்திவாசன்,   15-10-2017 இரவு  திருநாகேஸ்வரம் புற பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது  அவர்களை கடந்து   மின்னல் வேகத்தில்  tn,45.AU.4183 என்ற எண்ணுடைய  டாடா சுமோ  நிற்காமல்   சென்றதை கண்ட  உதவி ஆய்வாளர்  கீர்த்தி வாசன் மற்றும் காவல்துறை  சார்ந்த காவலர்கள்  ஜம்புலிங்கம்  ,ராமேஷ், செல்வகுமார் ,சுரேஷ், சிவசங்கர்,சுந்தரம் ஆகியோர் அந்த வாகனத்தை விரட்டி பிடித்தார்கள்.  அப்போது   அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உள்பட   இரண்டு   நபர்களும்   இறங்கி  ஓடி  விட்டார்கள்.  இதனை கண்ட தனிபடை போலீஸார்கள்   வாகனத்தை சோதனையிட்டதில்,  அதில் பல  லட்சம்  மதிப்புள்ள வெளி மாநில மதுவகை பாட்டில்கள்  மற்றும்  சாராய மூட்டைகள்  இருந்ததை  தொடர்ந்து, அந்த வாகனத்தையும், அதில் இருந்த  கடத்தல் மது  பாட்டில்களையும்,  சாராய மூட்டைகளையும், பறிமுதல் செய்து  கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்தார் . இவரின் துரிதமாக செயல்பாட்டினை சிறப்பிக்கும் வகையில் காவல்துறை உயர் அதிகாரிகள்  பாராட்டு தெரிவித்தார்கள் .

 4 மணி நேரத்திற்குள் இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நான்கு நபர்களை கைது வழக்கு  (2-12-2018 )

கும்பகோணம் புகைவண்டி நிலையத்தில் கடந்த 2.12.2018 ம் தேதி புது தில்லியில் இருந்து ஒரு தனியார் வங்கியில் வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த 23 வயது பெண் இரவு புகைவண்டி நிலையத்தின் வாயிலில் இருந்து ஒரு ஆட்டோவில் ஒரு குறிப்பிட்ட தங்கும் விடுதியின் பெயரை சொல்லி அங்கு போக ஆட்டோவில் ஏறினார்.

அப்படி செல்லும் பொழுது அந்த ஆட்டோ டிரைவர் குறிப்பிட்ட இடத்திற்க்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த அந்த பெண் ஒரு இடத்தில் இறங்கி வேறு ஏதேனும் ஆட்டோ கிடைக்குமா என எண்ணி அங்கிருந்து சுமார் 1/2 K.m நடந்து வரும் வழியில் ஒரு புதர் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த 4 நண்பர்களின் பார்வையில் படுகிறார்.

உடனே அவர்களில் இருவர் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் வந்து தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என கேட்டு அவருக்கு உதவி செய்வது போல் நடித்து ஒரு காட்டுப்பகுதிக்கு அந்த பெண்ணை கடத்தி சென்று 4 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்து விட்டு பின்னர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஓரு ஆட்டோவில் ஏற்றி குறிப்பிட்ட தங்கும் விடுதியில் இறக்கி விட சொல்லி நான்கு பேரும் தலைமறைவாகி விடுகிறார்கள்.

அதனை தொடர்ந்து  வடமாநில பெண் இரவில் நடந்த சம்பவம் குறித்து வங்கியில் பணிபுரியும் தனது நண்பர் ஒருவரின் மூலம் குடந்தை மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் Cr.no.295 /18 U/s.366, 354( B),376(D),506 ll,IPC ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு Dr.திரு செந்தில்குமார் அவர்கள் உத்தரவு படி கும்பகோணம் வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.செங்கமலக்கண்ணன் , அவர்கள் அறிவுரையின் படி கும்பகோணம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு .ரமேஸ்குமார், உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ( Crime Intelligence ), ssi.செல்வக்குமார் Intelligence ), SSI.ராஜா, ரமேஷ், குகன் , கதிஷ், சிவசங்கர், சண்முகம் , வினேத் ,சுரேஷ், ஜம்புலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு தனிப்படையினர் சம்பவம் நடந்த இடத்தினை பார்வை இட்டனர்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்ததில் தன்னை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரின் Cell phone யை வாங்கி தன்னை கடத்தி சென்றவர்களில் ஒருவன் பேசியதாக கூறினார். இதையடுத்து சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஆட்டோ ஓட்டுநரை கண்டு பிடித்து அவனது Cellphone யை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தார். அதன் பின்னர் சுமார் 4 மணி நேரத்திற்குள் இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நான்கு நபர்களை கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்த திருவிடைமருதூர் திருப்பணிப்பேட்டையில் வசித்து வரும் நாகராஜ் மகனாகிய ஆட்டோ டிரைவர் குருமூர்த்தியையும் கைது செய்தார்கள்.

இவ்வழக்கில் மிகவும் திறமையாக செயல்பட்டு வழக்கு பதிந்து சில மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த உதவிஆய்வாளர் திரு கீர்த்திவாசன் மற்றும் சிறப்பு தனிப்படையினரை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.திரு . செந்தில்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

கொலை குற்றவாளிகள் மூன்று மணி நேரத்தில் கைது வழக்கு (14-1-2019 )

கும்பகோணம் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகனான சக்திவேல் என்பவர் அதே பகுதியில் இருந்த புதிய கழிவு நீர் தொட்டியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக  மேற்கு காவல் நிலையத்திற்க்கு ( 14-1-2019) அன்று காலை வந்த தகவலின் அடிப்படையில்  கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு . செங்கமலக் கண்ணன் ஆய்வாளர் திரு .ரமேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று இறந்த சக்திவேல் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து  தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .S.S. மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின்படி கும்பகோணம்  DSP செங்கமலக்கண்ணன் வழிகாட்டுதலின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமாரின் ஆலோசனைபடி காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் SSI.ராஜா,SSI செல்வக்குமார், மற்றும் HC.ரமேஷ்குமார், சண்முகம், குகநேசன்,கதீஸ்,சுரேஸ், ஜம்புலிங்கம்,சிவசங்கர் கொண்ட சிறப்பு தனி படை போலீசார்கள் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற் கொண்டார்கள். இதில் கொலையான சக்திவேல் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இதே பகுதியில் உள்ள இவருக்கு போட்டியாக இருந்த மற்றொரு ரவுடியான தமிழ்செல்வன் (24)  மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவனது சில நண்பர்களுடன் முன் விரோதம் காரணமாக 13-1-2019 அன்று இரவு சுமார் 9 மணியளவில் பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு ரவுடி சக்திவேலை கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் வீசி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து நாச்சியார்கோயில் அருகில் பதுங்கி இருந்த இக்கொலையில் சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் ஆறு பேரையும் சம்பவம் நடந்ததாக தகவல் வந்த மூன்று மணி நேரத்தில் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான சிறப்பு தனிப் படை போலீசார் கைது செய்தது கூறிப்பிட தக்கதாகும்.

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்ற திரு கீர்த்திவாசன்

கடந்த வருடம் (2019 ) கும்பகோணம் அடுத்துள்ள திருபுவனத்தில் நடைபெற்ற ராமலிங்கம் என்பவரின் கொலை வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை அவர்கள் பயன் படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கொண்டு உடனடியாக கைது செய்தது சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸார் குழுவாகும் . அதனை பாராட்டும் விதமாக தமிழ் மாநில மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரியான IG திரு .வரதராஜூ IPS. அவர்கள் உதவி ஆய்வாளர் திரு . கீர்த்திவாசனுக்கு அழைப்பு விடுத்து சிறப்பு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள் .

தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணத்தில் 15.10.17 அன்று இரவு திருநாகேஸ்வரம் புற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அவர்களை கடந்து மின்னல் வேகத்தில் TN 45 AU 4183 என்ற என்னுடைய டாடா சுமோ நிற்காமல் சென்றதை வாகனத்தை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் தலைமையிலான ஜம்புலிங்கம், ரமேஷ், செல்வகுமார், சுரேஷ், சிவசங்கர், சுந்தரம் ஆகியோர் அந்த வாகனத்தை விரட்டி பிடித்தனர். சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மது வகைகள் பாட்டில்கள் மற்றும் சாராய மூட்டைகள் இருந்ததை பறிமுதல் செய்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்தனர். இதனைப் பாராட்டி 28.01.2020 அமலாக்கத்துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு. ராஜேஷ் தாஸ்,IPS, அவர்கள் வெகுமதிகள் வழங்கினார்.

 

 

இப்படி சவாலான வழக்குகளை சந்தித்து வெற்றி கண்டு வரும் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் பணியாற்றி வரும் திரு கீர்த்திவாசன் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் மற்றும் நிர்வாக குழுவின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

 

நமது சிறப்பு கட்டுரையாளர் செய்தியாளர்


குடந்தை
ப.சரவணன்

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “சுடர்மிகு சூரியனாக வலம் வரும் குடந்தை .உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன். MA

  1. இவர் போல் நம் தமிழ் நாட்டில் பத்து அதிகாரிகள் இறுந்தால் குற்றம் என்பதே இல்லை என்ற நாடாக இறுக்கும் இவர் பணி சிறக்க நான் இறைவனிடம் வேண்டுகிறேன் இவர் பெயாறிலே கிர்த்தி இறுப்பதால் என்றும் இவறுக்கு வெற்றிதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி.

515 திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா IPS அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami