ஆயுதப்படை காவலர்களுக்கு SP  அறிவுறுத்தல்படி யோகா பயிற்சி

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உடலையும் மனதையும் ஓரே சீராக வைக்க கூடிய யோகா பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருடாந்திர கூட்டு திரட்டு கவாத்து பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் முதுகெலும்பாக செயல்படும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உடலையும் மனதையும் ஓரே சீராக வைக்க உதவும் யோகா பயிற்சி இன்று (31.01.2020)மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில 130 க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சித்தபிரிவை சேர்ந்த முறைசார்ந்த யோக பயிற்றுவிப்பாளர்கள் கொண்டு, இன்று யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் இந்த யோக முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் துவக்கி வைத்து பின்னர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் உடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்கள் பின்னர் யோகா வின் முக்கியத்துவம் குறித்து ஆயுதப்படை காவலர்களிடம் யோக பயிற்சி குறித்து விவாதித்தார்கள் அதாவது யோகா உடலுக்கு இசைவு இணக்கம் அதிகரிக்கிறது.

மேலும்,

  • தசைகளின் நலத்தையும் வலிமையையும் பேணுகிறது.

  • சுவாசத்தை சீராக்கி உயிர்வீரியத்தை மிகுவிக்கிறது.

  • வளர்ச்சிதை மாற்ற சமநிலையைப் பேணி வளர்க்கிறது.

  • உடல் எடையைக் குறைக்கிறது.

  • இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது.

  • உடற்பயிற்சி வல்லமையைக் கூட்டுகிறது.

  • நோய் எதிர்ப்பு சக்தியை மிகுவிக்கிறது.

  • இதய ரத்த நாளங்களின் திண்மையைப் பாதுகாக்கிறது.

என இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிகழ்வில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருவேங்கிடம் அவர்கள் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

54 திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் இணைந்து மாவட்ட அளவில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami