125
Read Time1 Minute, 17 Second
புதுக்கோட்டை : கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த செலவில் ரூபாய் 800 மதிப்புள்ள 50 எலெக்ட்ரானிக் கொசு பேட்களை வாங்கித் இரவு காவலுக்குச் செல்லும் காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.
எங்களின் மனநிலையை அறிந்து கொசுக்கடியால் அவதிப்படுவதைப் பார்த்து மனிதநேயத்தோடு எஸ்.பி. கொசு பேட் சொந்த பணம் ரூ 40 ஆயிரம் செலவு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் இரவு பணியில் உள்ள காவலர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றனர் நெகிழ்ச்சியோடு. ஒவ்வொரு உயர் அதிகாரியும் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் நிலையை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக உள்ளது.