பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க மாணவர் தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு சென்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்கள் அழைத்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது பெற்றோர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் அவரது தாயார் ஜெயந்தி என்பவர் எனவும் தெரியவந்தது, இதனை அடுத்து காவல்துறையின் துரித நடவடிக்கையால் மாணவர் அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மாணவரின் பெற்றோர் காவல்துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பில் தஞ்சை குடமுழுக்கு விழா

41 தஞ்சை : 23 ஆண்டுகளுக்குப் பிறகு 05.02.2020ம் தேதி தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழக காவல்துறை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami