சேலம் மதுவிலக்கு SP சிவக்குமார் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கு

Admin

சேலம் : சேலம் மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.சிவக்குமார்  அவர்கள் கல்லூரி மாணவர்களிடையே கள்ளச்சாராயம் பற்றியும், அதன் பாதிப்பு பற்றியும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி கலை நிகழ்ச்சிகள் மூலமாக அதன் விழிப்புணர்வை சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசின் சார்பில் போலி மதுபானம் மற்றும் கள்ள சாராய ஒழிப்பு குறித்து பல இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி இன்று சேலம் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி மதுபானம் மற்றும் கள்ள சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக கள்ளசாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நடன கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலைஞர்கள் எமதர்மன் வேடமணிந்து பாசக்கயிறு வீசி இருப்பது போல் நடித்தது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் தாரை தப்பட்டை அடித்து பெண்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி ஆனது பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை வழியாக சேலம் பழைய பேருந்து நிலையம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த பேரணியில் கல்லசாராயம் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் பேரணியாக வந்தனர். இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மது மற்றும் கள்ள சாராயம் அருந்துவதால் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இருதயம் பலவீனமாக்கப்படும். கண் பார்வை, கை,கால் வலிப்பு, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சோர்வடைய செய்யும். கல்லீரல் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும். இதனால் திடீர் மரணமும் ஏற்படும். ஒரு மனிதனை நோயாளியாக ஆக்குவது மட்டுமல்லாமல் தற்கொலைக்கும் இது தூண்டுகிறது. மது அருந்தும் பழக்கத்தால் உற்றார், உறவினர்களிடம் கெட்ட பெயர் ஏற்படும். அவர்களுடைய வெறுப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

குடும்பத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அவப்பெயர் ஏற்படுவது மட்டுமல்லாது, குடும்பத்தின் முன்னேற்றத்தையும் பாதிக்கும். இதுபோன்ற பல தீமைகளிலிருந்து மது அருந்துபவர்கள் விடுபட்டு, நாமும் மது அருந்தாமல், மற்றவர்களை போன்று வாழ்வில் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து, முன்னேறிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கும், நாட்டிற்கும் வளம் சேர்ப்போம்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதியவரை குடும்பத்துடன் சேர்க்க திருச்சி KK நகர் காவல்துறையினர் அறிவிப்பு

102 திருச்சி : மேலே புகைப்படத்தில் கண்ட பெரியவரின் பெயர் பழனியப்பன் வயது 88 த/பெ. வைரப்பெருமாள் சித்தூர் தொட்டியம் திருச்சி மாவட்டம் என்றும் ஏற்கனவே இந்திய […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami