முதியவரை குடும்பத்துடன் சேர்க்க திருச்சி KK நகர் காவல்துறையினர் அறிவிப்பு

Admin
Read Time0 Second

திருச்சி : மேலே புகைப்படத்தில் கண்ட பெரியவரின் பெயர் பழனியப்பன் வயது 88 த/பெ. வைரப்பெருமாள் சித்தூர் தொட்டியம் திருச்சி மாவட்டம் என்றும் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர் திருச்சி கஸ்டம்ஸ் அலுவலகத்தில் கிளாஸ் 4 பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும் தற்போது கேகே நகரில் தனது மகள் பாபி வீட்டில் தங்கி இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் அவருக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு ஞாபகமறதி இருப்பதால் தனது மகளின் வீட்டு முகவரியை சரியாக தெரிவிக்க இயலவில்லை. கேகே நகர் பகுதியில் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்கள் வீட்டை கண்டறிய முடியவில்லை.

இவரது மனைவி பெயர் கஸ்தூரி என்றும் அவர் தற்போது இறந்து விட்டார் என்றும் அவருக்கு கேதார் லிங்கம் என்ற மகன் சிங்கப்பூரில் உள்ளதாகவும், பிரபாகரன் என்ற மகன் திருச்சி அண்ணா நகர் OFT பகுதியில் வசித்து வருவதாகவும் மற்றொரு மகள் பாபி என்பவர் கேகே நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், மற்றொரு மகள் கீதா லட்சுமி என்பவர் தஞ்சாவூர் பகுதியில் வசித்து வருவதாகவும் மாற்றிமாற்றி கூறுகிறார் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது இவரைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு இவர் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிவித்தால், மேற்படி பெரியவரை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்க உதவியாக இருக்கும்.

பெரியவரை குறித்த தகவல் தெரிவிக்க

காவல் ஆய்வாளர்  கேகே நகர் காவல் நிலையம் திருச்சி மாநகரம்

 9498159777

உதவி ஆய்வாளர் கேகே நகர் காவல் நிலையம்

9498180355.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்தல், கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு

53 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email கோவை :கோவையில் இருந்து கேரளா கொண்டு சென்ற […]

மேலும் செய்திகள்

Bitnami