அன்புக் குழந்தைகளுக்கான விழித்திரு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Admin

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அன்புக் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து ஏற்பாடு செய்த விழித்திரு விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று (13.02.2020) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீலா தெற்கு வீதி நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 பள்ளிக் குழந்தைகளுக்கான விழித்திரு விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் திரு. பிரவீன்.பி. நாயர் இஆப அவர்கள் தலைமையிலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செல்வநாகரத்தினம்.இகாப அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அன்புக் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவராலும் இணைந்து விரிவான பிரசுரம் வெளியிடப்பட்டது.

மேலும் அன்பு குழந்தைகள் தங்களுக்கு நேரும் சொல்லமுடியாத விவரிக்கமுடியாத நிகழ்வுகளை தெரியப்படுத்துவதற்காக பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட புகார் பெட்டி பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இருவரும் கூட்டாக நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அவர்களிடம் புகார் பெட்டி வழங்கப்பட்டது.

பின்னர் பள்ளி வளாகத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் அன்புக் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் தொடர்பாக விழிப்புணர்வு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேசிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் இந்தியாவிலுள்ள சுமார் 130 கோடி மக்களில் 40 சதவீதம் பேர் 18 வயது நிறைந்த குழந்தைகளே உள்ளனர் எனவே நாட்டின் முதல் சொத்து குழந்தைகளே நாடு எந்த துறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் குழந்தைகள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி எனவும் குழந்தைகளே நாட்டின் மிகப்பெரிய செல்வம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய எதிரி தொலைபேசியாக உள்ளது எனவும் மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து விழித்திரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நமது பள்ளியில் ஏற்பாடு செய்து மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று குழந்தைகள் என்றும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.

பின்னர் இதனைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் நான் அன்பு குழந்தைகளுக்கு செல்ல வேண்டியது என்னவென்று சொன்னாள் ஆரோக்கியமான தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் தொடர்பாக சிந்தித்தல் மற்றும் இது தொடர்பாக தனியாகவும் நண்பர்களுடனும் கலந்துரையாடுதல் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென பள்ளி மாணவிகள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பு அழகு ஒருங்கிணைப்பாளர் N.சிவக்குமார் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர், திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் , நேர்முக உதவியாளர் முதன்மை கல்வி அலுவலர் , நேர்முக உதவியாளர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் பங்குபெற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக பட்ஜெட் 2020 : காவல்துறைக்கு 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு

65 சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami