Read Time1 Minute, 10 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாயார் 14.01.2020 அன்று அளித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் உலகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு சம்பந்தமாக அச்சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் முன்பு ஒப்புதல் வாக்குமூலம் பெற்றபோது, மேலும் இரண்டு நபர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சிங்கம்புணரியை சேர்ந்த போஸ் மற்றும் பிரகாஷ் ஆகியோரை 13.02.2020 அன்று POCSO Act-ன் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து ,சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்