சென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்

Admin 2

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது 2020 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராமில் உள்ள தேவாரம் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மற்றும் கோல்ஸ் அண்ட் பிட்னஸ் ஸ்டுடியோ (Golds gym & Fitness studio) உரிமையாளர் திரு.பழனி அவர்கள் அப்பகுதியில் லயன்ஸ் கிளப் மூலமாக பல நற்பணிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். திரு.பழனி அவர்களிடம் தலைமை நிலைய காவலர் திரு.செல்வகுமார் பற்றி விசாரித்தபோது, அவர் தலைமை காவலர் பற்றி இவ்வாறு பாராட்டி மற்றும் புகழ்ந்து கூறினார்.

தினமும் அவர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி திறம்பட செய்து வருகிறார். தலைமை காவலர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக சாலை ஓரங்களில் சென்று சாலை விதிமுறைகளை மீறுபவர்களை அழைத்து அவர்களுக்கு புரியும்படியாக விபத்தின் உடைய ஆபத்துக்களை அன்பாக கூறி அறிவுரை செய்து வருபவர்.  கடமைக்கு வேலை செய்யாமல் அவர் பொதுமக்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு இவர் ஓர் இக்கால இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். மக்கள் பணியே மகேசன் பணி என்று பணி புரியும் இவர், அப்பகுதியில் வாழும் மக்களால் பெருமளவில் பாராட்டு பெற்று வருகிறார். இவருடைய துரித பணிகள் அப்பகுதி மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெற்று தற்போது இவர் பதக்கம் வாங்கி உள்ளார். திரு.செல்வகுமார் அவர்களின் மனைவி T8 முத்தா புதுபேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் திருமதி. புளோரன்ஸ் ஜோஸ்பின் அவர்களும், முதலமைச்சர் பதக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காவலர் தம்பதி ஒரே நேரத்தில் பதக்கம் பெற்றிருப்பது அபூர்வம்.

2 thoughts on “சென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

309 மதுரை: மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் ஆத்திகுளத்தில் உள்ள கேத்தி மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452