சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Admin
Read Time2 Minute, 10 Second

தூத்துக்குடி : எட்டையாபுரம், எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(73). இவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் திருமதி. சுரேத்துவாணி 23.01.2020 அன்று அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் ஜெகநாதனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேற்படி எதிரி ஜெகநாதன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி ஜெகநாதன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி மேற்படி எதிரி ஜெகநாதனை இன்று (15.02.2020) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாலக்கோட்டில் புதிதாக மகளிர் காவல் நிலையம் திறப்பு

70 தர்மபுரி : பாலக்கோடு, காரிமங்கலம் தாலுகாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொல்லை, குழந்தை திருமணம் போன்ற புகார்களை தெரிவிக்க பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami