வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்த சிவகங்கை தனிப்படை போலீசார்

Admin
Read Time2 Minute, 49 Second

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட, சீயர் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சௌந்தரவல்லி என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கூவாணிப்பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது சில அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சௌந்தரவல்லி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் 09.12.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் u/s 392 IPC-ன் கீழ் வழக்குப் பதிந்தனர்.

இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதை அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தபோது  சிவகங்கை அருகே சக்கந்தி மில் கேட் பகுதியில் 14.02.2020 அன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட போது தனிப்படை போலீசாரிடம் பிடிபட்டனர்.

பிடிபட்ட நபர்களை சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதுபோன்ற சிவகங்கையில் நடந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வரவே சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் 15.02.2020 அன்று பிரபுதேவா மற்றும் சோனைமுத்து ஆகிய இருவரை கைது செய்து ,சிறையில் அடைத்தனர்.

மேலும் மேற்படி நபர்களிடமிருந்து வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 3.5 பவுன் தங்க செயினை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர் . இச்செய்தியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை துறைமுகத்திற்குள் சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி, வதந்தி காவல் துறையினர் விளக்கம்

58 சென்னை : சென்னை எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் பெண் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதாகவும், அங்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும்இ ஊர் பெயர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
9 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
16 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
6 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0
30 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami