சென்னை துறைமுகத்திற்குள் சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி, வதந்தி காவல் துறையினர் விளக்கம்

Admin

சென்னை : சென்னை எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் பெண் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதாகவும், அங்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும்இ ஊர் பெயர் சொல்ல துணிவில்லாத ஒருவன் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றது

கண்டெய்னர் அருகில் சிங்கம் குட்டிகளுடன் நடமாடியது, சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் என்பது பொய் என்று விளக்கம் அளித்துள்ளது காவல்துறை. இந்த புகைப்படம் குஜராத் மாநிலம், பிபாவாவ் துறைமுக பகுதியில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

துறைமுகத்தையொட்டிய காட்டுப்பகுதியில் இருந்து அடிக்கடி சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் இரைதேடி குட்டிகளுடன் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து நடமாடுவதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்வதாக விரிவாக செய்தி வெளியிட்டு உள்ளது.இந்த இரு சிங்க படங்களையும் திருடிய சமூக விரோதிகள் அதனுடன் விபத்தில் அடிப்பட்டு ரத்தகாயத்துடன் போராடிய இளைஞரின் புகைபடத்தையும் சேர்த்து ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை போன்று கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு வாட்ஸ் அப்பில் சென்னை துறைமுகத்தில் சிங்கம் என்று வதந்தியாக பரப்பிவிட்டுள்ளனர்.

பொதுமக்கள் இதனை உண்மை என்று நம்ப வேண்டாம் என்றும், இதனை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் தரப்பில் இருந்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரம் கிரைம்ஸ்

181 கிரைம் 1: இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்டம் 16.02.2020-ம் தேதி பெருநாழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய ரூபாய் 6,000/- மதிப்புள்ள ஒரு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami