இந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை

Admin

38-வது அனைத்து இந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டி ஹரியான மாநிலம் குர்ஹானில் 14.02.2020-ம் தேதியன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக இதுவரை கலந்துக்கொண்டதில்லை . இந்த ஆண்டு காவல்துறை துணை ஆணையர் திரு. தேஷ்முக் சேகர் சன்ஜய்¸ இ.கா.ப. அவர்களின் தலைமையில் கலந்துக்கொண்டு 3 பதக்கங்களையும்¸ 1 கோப்பையினையும் பெற்று சாதனை புரிந்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்தியாவிலே முதல் முறையாக குதிரை ஏற்ற போட்டியில் பெண் காவலர் கலந்துக்கொண்ட பெருமை தமிழகத்தை சார்ந்த பெண்காவலர் திருமதி. சுகன்யாவை சேரும். காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி இ.கா.ப அவர்கள் அறிவுரையின் பேரில் குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி பங்கேற்று வெற்றி பெற்று சாதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சேலம் மாநகர காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

50 சேலம் : சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.M.அங்கப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் பொதுமக்கள் உதவியுடன், போக்குவரத்து நெரிசல் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami