காவல் நிலையத்தில் குடும்ப விழா

Admin

அரியலூர்: அரியலூர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 17/02/2020 அன்று குடும்ப விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் நிலையங்களில் பெரும்பாலும் கணவனுடன் ஏற்படும் குடும்ப பிரச்சினை, மனக்கசப்பு காரணமாக பெண்கள் புகார் அளிக்கின்றனர். புகார்கள் விசாரிக்கப்பட்டு புகார் அளித்த பெண், அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து சமாதானம் செய்து அவர்களை மீண்டும் சேர்ந்து வாழ வழிவகை செய்து வருகின்றனர்.இது போன்று தம்பதியினரை மீண்டும் அழைத்து அவர்களுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவில் குடும்ப வாழ்வியல் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இதில் மனோதத்துவ வகுப்புகள் எடுக்கப்பட்டன.விழாவிற்கு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மோகன்தாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருமதி.மீனாட்சி மற்றும் செல்வி.கங்காஆகியோர் மனோதத்துவம் பற்றி பேசினர்கள்.

 

அரியலூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சேலத்தில் ஜல்லிகட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கிய சேலம் மாவட்ட SP

55 சேலம் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 15.2. 2020 அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் திரு.ராமன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami