முன்விரோதம் காரணமாக கொலை செய்த நபர்க்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை

Admin

தேனி: ஆண்டிபட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ரஞ்சித் குமார் என்பவரை சிவபாண்டி என்பவர் கொலை செய்ததாக இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிவபாண்டி என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்.

இவ்வழக்கு 21.02.2020-ம் தேதியன்று தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில்
நீதிபதி திரு.அப்துல்காதர்.BABL., அவர்கள் போலீசார் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் சிவபாண்டி என்பவர் குற்றவாளி என்பதை உறுதி செய்து ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு E. சாய் சரண்தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரை பொறிவைத்து பிடித்த குமரி மாவட்ட போலீசார்

106 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 21.02.2020. சமீப காலமாக குமரி மாவட்டத்தில் நகைக்கடை திருட்டு, வீடுகளில் திருட்டு என பல சம்பவங்கள் நடைபெற்றது. மேற்படி சம்பவங்களில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami