தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரை பொறிவைத்து பிடித்த குமரி மாவட்ட போலீசார்

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 21.02.2020. சமீப காலமாக குமரி மாவட்டத்தில் நகைக்கடை திருட்டு, வீடுகளில் திருட்டு என பல சம்பவங்கள் நடைபெற்றது. மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில் மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டது நித்திரவிளை S T மங்காடு பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் என்றும், அவருக்கு உதவியது பழைய நகை வியாபாரி ரமேஷ்குமார் என்பதும் தெரியவந்தது. பின்பு எட்வின் ஜோஸிடம் விசாரித்ததில் பல இடங்களில் திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் 1 1/4 கோடி மதிப்பிலான 330 சவரன் நகை, 2 இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது. இதனை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

42 திருவள்ளூர்: சென்னையிலிருந்து சூலூர் பேட்டை ரயிலில், நந்தியம்பாக்கம் மீஞ்சூர் அனுப்பம்பட்டு, அத்திப்பட்டு, பொன்னேரி, எண்ணூர் பகுதியிலிருந்து 25 கிலோ பையில் இரயிலின் சீட்டு அடியில் பதுக்கி வைத்து, […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami