திருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

Admin

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 07.02. 2020 – ம் தேதி காலை 10 மணி முதல் 08.02.2020 ஆம் தேதி காலை 06 மணி வரை தொடர்ந்து பல இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

வாகன சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய இருபத்தொரு ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டன. மேற்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் மீது பிரிவு 279 இ.த.ச (அதிவேகமாக ஆஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல்- 6 மாதகால சிறை தண்டனை அல்லது ரூ 1000 அபராதம் விதிக்கப்படும்) மற்றும் பிரிவு 185 மோட்டார் வாகன சட்டம் (மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் 6 மாதகால சிறை தண்டனை அல்லது ரூபாய் 10, 000/- அபராதம் விதிக்கப்படும்) முதல் தகவல் அறிக்கை ( FIR )வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட உடன் ஆறு மாதகால கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி மாவட்ட காவல் உதவி எண் /வாட்ஸ்அப் எண் 9442992526 தகவல் தெரிவிக்கலாம் புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்

106 அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின்படி தூத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்கள் தலைமையில் தலைமை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami