திருச்சியில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை

Admin

திருச்சி: திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரில் வட்டம் ராசாம்பாளையம் வெள்ளாளர் தெருவில் வசிக்கும் பிச்சை என்பவரின் மகன் பரதேசி வயது.55 என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இதில் இளைய மகன் பாலு என்கிற தனபாலு வயது.25 என்பவர் எந்த வேலைக்கும் செல்லாமால் வீட்டில் TV பார்த்துக்கொண்டும் ஊர் சுத்திக்கொண்டும் இருந்துள்ளார்.

இதனால் பரதேசி மகன் பாலுவை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தால் சோறு கிடையாது என்று கண்டித்துள்ளார். கடந்த 8.01.2019-ம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் பரதேசிக்கும், தனது மகன் பாலுவுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, வேலை வெட்டி இல்லாத உனக்கு வீட்டில் இடம் கிடையாது என்றும், எந்த நேரமும் டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று டி.வி-யை உடைத்துள்ளார். இதனால் பாலு என்கிற தனபால் நீ உயிருடன் இருந்தால்தானே என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்வாய் உன்னை தொலைத்து கட்டிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 09.01.2019-ம் தேதி காலை 10.15 மணியளவில் வீட்டில் இருந்த பரதேசியிடம் தனபால் சாப்பிடுவதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பரதேசி பணம் தரமுடியாது வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லியுள்ளார். அதனால் கோபம் அடைந்த பாலு (எ)தனபால் நீ உயிருடன் இருக்கும் வரை எனக்கு தொல்லைதான் என்று பரதேசியை அடித்து நடுத்தெருவிற்கு இழுத்து சென்று, வாதநார மரத்தடியை எடுத்து இன்றுடன் செத்து ஒழிடா என்று சொல்லி பரதேசியின் தலை, முகம், கால், கை ஆகிய இடங்களில் ஓங்கி ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார்.

எனவே மேற்படி கொலை சம்பவம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் என்பவர் மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் பாலு (எ)தனபால் என்பவர் மீது மணச்சநல்லூர் காவல் நிலைய  வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று 26.02.2020-ம் தேதி திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது இதில் இவ்வழக்கின் எதிரியான பாலு (எ) தனபால் என்பவருக்கு கொலை குற்றத்திற்கான தண்டனையாக ஆயுள் சிறை தண்டனையும்  ரு.500/- அபதாரமும் கட்ட தவறினால் 06 மாத காலம் கடுங்கால் தண்டனை கொடுத்து தீர்பபளித்துள்ளார். மேற்படி தீர்ப்பின் படி பாலு என்கிற (எ) தனபால் இன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

81 திண்டுக்கல்:   திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடைபாறைப்பட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சந்துரு என்பவர் கொலை செய்யப்பட்டார். […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami