வேலூர் மாவட்ட காவல்துறை மிக முக்கிய அறிவிப்பு! வடநாட்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

Admin
0 0
Read Time2 Minute, 42 Second

வேலூர் : வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் காட்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட செல்போன் கடைகளில் சமீபத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். அதில், ரூ.15 லட்சம் மதிப்பிலான 150-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் வடநாட்டு கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

அதற்கேற்ப சம்பவ பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில் சந்தேகத்துக்குரிய வட மாநிலத்தவர்கள் சுற்றித்திரிவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. படத்தில் உள்ளவர்களைப் பார்க்கும்போது பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்போது வெளியிடப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய நபர்களை வேலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யாரேனும் பார்த்திருந்தாலோ, இப்போது பார்த்தாலோ உடனடியாக கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல் கொடுக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும். தவிர, அவர்களுக்குக் காவல்துறை தரப்பில் தக்க சன்மானமும் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

தொடர்புக்கு…

வேலூர் சரக துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் – 94982 10143

காட்பாடி சரக துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டியன் – 94981 05993

வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.நாகராஜன் – 94981 09959

காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.புகழ் – 94981 11427

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

65,000/- ரூபாய் மதிப்பிலான தங்க நகை கொள்ளை, 24 மணி நேரத்தில் மீட்ட பழனிசெட்டிபட்டி காவல் தனிப்படையினர்.

505 தேனி : தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காயத்ரி என்பவரது வீட்டில் இருந்த 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami