கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்த வி.கே.புரம் காவல்துறையினர்.

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட வி.கே.புரம் பகுதி அருகே கந்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஜீவன்குமார்(53), இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் எதிரிகளான வி.கே.புரம் பகுதியை சேர்ந்த சுந்தர் (39) சின்னத்துரை (37) என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று (05.03.2020) வழக்கை விசாரித்த நீதிபதி திரு. விஜயகாந்த் அவர்கள் கொலை குற்றவாளிகள் சுந்தர், சின்னத்துரை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சிறப்பான முறையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்த வி.கே.புரம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி

40 கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் போலீசார் கல்வராயன் மலை ஈச்சங்காடு பகுதியில் சாராயவேட்டை நடத்தினர் அப்போது ஈச்சங்காடு கிராமத்தைச் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami