திருவள்ளூர், திருப்பாலைவனத்தில் 10 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி, பொன்னேரி ASP பவன்குமார் பங்கேற்பு

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ,திருப்பாலைவனம் கிராமத்தில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.பொன்னேரி-பழவேற்காடு சாலையின் நடுவே அமைந்துள்ள இந்த திருப்பாலைவனம் பகுதியில் சமூக விரோதிகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டி சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் துவங்கப்பட்டன. முக்கிய வீதிகளிலும் முக்கியமான இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, இதன் துவக்கவிழா பொன்னேரி உதவி காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் ரெட்டி தலைமையில் நடை பெற்றது.

பின்னர் பேசும் போது, இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காகவும் மற்றும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கும் தேவை சிக்னல் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது எனகூறினர். மேலும் வெளியூர் செல்வார்கள் தங்களது விவரத்தை அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார். திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி,  திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் .வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் மாவட்டத்தில் Friends of Police குழுவிற்கு பன்முகத்திறன் பயிற்சி முகாம்

65 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 06.03.2020 காவலர்கள் நண்பர்கள் குழு (Friends of Police) உறுப்பினர்களுக்கான பன்முகத்திறன் பயிற்சி முகாமின் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami